உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித் துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும் பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.