Senthamil.Org

உரையினில்

தேவாரம்

உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம 
செயல்தீங்கு குற்ற முலகில் 
வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம் 
மிகவேத்தி நித்தம் நினைமின் 
வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து 
வளர்கங்குல் நங்கை வெருவ 
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
உரையினில் எனத்தொடங்கும் தேவாரம்