உரையார் பொருளுக் குலப்பி லானை ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப் புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப் புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத் திரையார் புனல்சேர் மகுடத் தானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிரையார் மணிமாட நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.உரையார் எனத்தொடங்கும் தேவாரம்