உரையாரும் புகழானே ஒற்றி யூராய் கச்சியே கம்பனே காரோ ணத்தாய் விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால் மிக்கானே அக்கரவம் ஆரம் புஜண்டாய் திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு திருவானைக் காவிலுறை தேனே வானோர் அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.உரையாரும் எனத்தொடங்கும் தேவாரம்