உரைமாலை யெல்லா முடையவடி உரையால் உணரப் படாதவடி வரைமாதை வாடாமை வைக்கும்மடி வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி அரைமாத் திரையில் லடங்கும்மடி அகலம் அளக்கிற்பார் இல்லாவடி கரைமாங் கலிக்கெடில நாடன்னடி கமழ்வீரட் டானக் காபாலியடி.