உரைசேரும் எண்பத்து நான்குநு றாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்கோயில் வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே.