உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக் கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம் விரைக்கொண் மலரவன் மால்எண் வசுக்கள்ஏ காதசர்கள் இரைக்கும் அமிர்தர்க் கறியவொண் ணானெங்கள் ஏகம்பனே.