உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர் திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான் வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.