உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.