உருவ நீத்தவர் தாமும் உறுதுவர் தருவ லாடையி னாருந் தகவிலர் கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள் ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே.