உருளும் போதறி வொண்ணா உலகத்தீர் தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம் அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே.