உருளுடைய தேர்புரவி யோடும் யானை ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர் இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம் பொருளுடைய ரல்லர் இலரு மல்லர் புலித்தோ லுடையாகப் புஜதஞ் சூழ அருளுடைய அங்கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.உருளுடைய எனத்தொடங்கும் தேவாரம்