உருத்திரனை உமாபதியை உலகா னானை உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப் பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப் பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக் கருத்தவனைக் கஞ்சனு ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.உருத்திரனை எனத்தொடங்கும் தேவாரம்