உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர் கரிய கண்டன் கழலடி தன்னையே குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.