உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி எரியாய தெய்வச் சுடரே போற்றி ஏசுமா முண்டி யுடையாய் போற்றி அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி அறிவே அடக்க முடையாய் போற்றி கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.உரியாய் எனத்தொடங்கும் தேவாரம்