உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர் கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப் பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே.