முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களேமுப்பதும் எனத்தொடங்கும் திருமந்திரம்