Senthamil.Org

முத்திரை

திருமந்திரம்

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தன்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்

வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே
முத்திரை எனத்தொடங்கும் திருமந்திரம்