மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே