மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும் கனவது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே
மனைபுகு வீரும் மகத்திடை நீராடி எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு வினையறி யாறு விளங்கிய நாலேமனைபுகு எனத்தொடங்கும் திருமந்திரம்