மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித் தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார் பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின் முகத்திடை நந்தியை முந்தலு மாமே