மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே