Senthamil.Org

மண்டலத்

திருமந்திரம்

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளiயாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்
சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே
மண்டலத் எனத்தொடங்கும் திருமந்திரம்