போவதொன் றில்லை வருவது தானில்லை சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை தாமத மில்லை தமரகத் தின்னொளி யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே