போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே