போது புனைசூழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் ஆதியுற நின்றது அப்பரி சாமே
போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே
போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி நீதியின் நல்லிருள் நீக்கிய வாறேபோது எனத்தொடங்கும் திருமந்திரம்