பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே