பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில் நாடுடை யார்களும் நம்வச மாகுவர் மாறுடை யார்களும் வாழ்வது தானிலை கூறுடை யாளையும் கூறுமின் நீரே