பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே