பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும் ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில் ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனேபூதங்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்