புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன் இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழநின் றாதியை ஓதி உணராக் கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே