புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே