பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே சூக்கும பஞ்சாக்கரம்