பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே