பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபடி உள்புகச் சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே