பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப் பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே