பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்னடி யார்மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும் அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே