பராபர னாகிப் பல்லூழிகள் தோறும் பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே