பயன்எளி தாம்பரு மாமணி செய்ய நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு அயஓளி யாயிருந் தங்கே படைக்கும் பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே