பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே