செந்தமிழ்.org

வெறுக்கும்

அபிராமி அந்தாதி
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.

ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும்
கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில்
அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து
விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும்
உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான்
தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும்
மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும்
வாழ்த்தி வழிபடுவேன்.