செந்தமிழ்.org

வவ்விய

அபிராமி அந்தாதி
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.

அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை
அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு,
எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர்
அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும்,
கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள
வேண்டும்.