செந்தமிழ்.org

வந்திப்பவர்

அபிராமி அந்தாதி
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:

ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள்,
அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும்
அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே
உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர்
என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே!
இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம்
செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே!
உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!