செந்தமிழ்.org

பின்னே

அபிராமி அந்தாதி
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும்
கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே
தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின்
அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன்.
அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில்
உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும்
வணங்கிக் கொண்டேயிருப்பேன்.