செந்தமிழ்.org

தொண்டு

அபிராமி அந்தாதி
தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.

அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை
வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும்
உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது
பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும்,
நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக்
கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.