செந்தமிழ்.org

திங்கட்

அபிராமி அந்தாதி
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை
பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில்
அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய
பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ!
விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!