செந்தமிழ்.org

ததியுறு

அபிராமி அந்தாதி
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும்
ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற
சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு
விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப்
போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல்
என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள்
புரிவாயாக!