செந்தமிழ்.org

தண்ணளிக்கு

அபிராமி அந்தாதி
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய
அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள்
நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில்
கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த
தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும்
பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள்
அல்லவா!