செந்தமிழ்.org

சுந்தரி

அபிராமி அந்தாதி
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே

என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என்
தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம்,
புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள்.
செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின்
தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை
அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள்.
தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள்.
அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.