செந்தமிழ்.org

கண்ணியது

அபிராமி அந்தாதி
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே!
நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ
உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித்
தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று
சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம்
தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!